பொது இடத்தில் அதிமுக பெண் எம்.பி.யிடம் செருப்படி வாங்கிய திருச்சி சிவா காமராஜர் பற்றி கருத்து கூற தகுதியில்லை . திருச்சி காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் .
திருச்சி சிவாவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருச்சி சிவா ஒரு முட்டாள். அவர் அதிமுக பெண் எம்பியிடம் செருப்படி வாங்கியவர் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
திமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் திருச்சி சிவா இவர் கொல்லைப்புற வழியில் உழைக்காமல் பதவியை அனுபவித்து வருபவர். இவரெல்லாம் காமராஜர் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளார். திருச்சி சிவாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் திருச்சி சிவாவை, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மிகவும் காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி வேலுச்சாமி கூறியதாவது:
தமிழ்நாட்டின் களங்கம், சாபம் என்னவென்றால் இப்படிப்பட்ட பைத்தியக்காரன் (திருச்சி சிவாவை குறிப்பிடுகிறார்)எல்லாம் டெல்லியில் 20 ஆண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது தான். அந்த ஆளு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எங்கள் ஊர்க்காரர் தான்.
திமுக ஆட்சியில் 1976 ஜனவரி 9ல் டிஸ்மிஸ் ஆகிறது. 1975 ஜூன் 25ல் எமர்ஜென்சி வருகிறது. இரண்டுக்கும் இடையே அப்புறம் 6, 7 மாதம் திமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது ஆட்சியை காக்க திமுகவினர் காலில் விழ தயாராக இருந்தனர். இந்த பைத்தியக்காரர் என்ன சொல்கிறார் என்றால் தமிழ்நாடு முழுவதும் காமராஜருக்காக தான் ஏசி வைத்தார்கள் என்கிறார்.
டேய் முட்டாள்.. ரஷ்யா போகும்போது கூட சாதாரண கதர் வேட்டி, கதர் சட்டையில் போய்விட்டு வந்த ஒரே ஒரு உலக தலைவன் காமராஜர் தான். மேனா மினுக்கி அரசில் செய்தவருக்கு காமராஜரை பற்றி என்ன தெரியும். ஒன்றுமே புரியாமல் ஏன் உளறுகிறார் என்று தெரியவில்லை. காமராஜர் அக்டோபர் 2ம் தேதி இறக்கிறார். கடைசி 2 மாதம் அவருக்கு உடல்நலம் சரியில்லை. யாரும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. அப்போது கருணாநிதி கையை பிடித்து கொண்டு ஜனநாயகத்தையும், நாட்டையும் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்த நபர் சொல்கிறார்.
அப்படியென்றால் கருணாநிதி, காமராஜர் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். அது எப்போதாவது நடந்து உள்ளதா? கற்பனையிலேயே பல விஷயங்களை விற்பனை செய்யும் இந்த புத்தியை எப்போது விடப்போகிறார் என்று தெரியவில்லையே? நான் நல்ல மனுஷங்களுக்கு பதில் சொல்லலாம். ஆனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு அதிமுக பெண் எம்பி காலில் இருந்த செருப்பை கழட்டி அடித்தபோது எதிர்த்து வார்த்தை பேசாமல் குனிந்து கொண்டே வந்த ஒரு நாலாந்தர மனிதரிடம் இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது’ சசிகலா புஷ்பா எம் பி யின் தலைமுடியை கோதி சரக்கடித்த போட்டோக்கள் வெளியாகி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கியவர் ‘
என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் என எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை . இதனை நன்கு ஆராய்ந்து திமுக தலைமை காமராஜர் மீது அவதூறு பரப்பிய சிவா எம்பி மன்னிப்பு கேட்காமல் இருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு திருச்சி சிவா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் வேண்டுகோள் வைத்துள்ளார் .