அனைத்து கட்சியினருக்கும் ஒரே விதிமுறை பின்பற்ற வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் கடிதம் .
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும், உன்னால் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சியில் வைக்கப்படும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் பற்றி அமமுக கேள்வி.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர். ப.செந்தில்நாதன், திருச்சியில் வைக்கப்படும் பேனர்கள் குறித்தும், அதற்கான அனுமதி குறித்தமான வழிமுறைகள் பற்றி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதில்,
“திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் திருச்சி வரும் சமயத்திலோ அல்லது எங்கள் கழகம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும் சமயத்திலோ காவல்துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்த பின்னர் எங்கள் கழகத்தின் சார்பில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கின்றோம்.
அப்படி வைக்கப்படும் பிளக்ஸ்கள், விழா முடிந்த அன்னரே அகற்றப்படும்மாறும் பார்த்துக் கொள்கிறோம்.
இதே போல ஆளுங்கட்சியினர் மற்றும் பிற கட்சிகளாலும் பிளக்ஸ்கள் மற்றும் பேனர்களால் இதே திருச்சி மாவட்டத்தில் நிறுவப்படுகிறது. சில இடங்களில் வருடக்கணக்காக ஒரே இடத்தில் பேனர்கள் உள்ளன.
அப்படி இருக்கையில், எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டும், பேனர் அமைக்கும் பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் பணிகளை தடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இதே காரணங்களுக்காக, சில காவல் நிலையங்களிலும் எங்கள் கழகத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எனவே திருச்சியில் பேனர்கள் வைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதை பற்றியும், அதற்கான அனுமதி வழிமுறைகள் பற்றியும், பேனர்களின் காலக்கெடுவை பற்றியும் தெளிவாக ஒரு அறிக்கை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதுவரை எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது மட்டும் பாராபட்சம் காட்டாமல், அனைவருக்கும் ஒரே விதிகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று செந்தில்நாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்