திருச்சி கே.கே.நகரில்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி .
கேகே நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை.
திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் திருநாவுக்கரசு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 74 .).
இவர் கடந்த மாதம் 27-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் சில நாட்கள் அங்கு தங்கினார். அதன் பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது எந்த பொருட்களும் திருட்டுப் போகவில்லை. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். கொள்ளையர்கள் உள்ளே புகுந்த நேரத்தில் ஏதேனும் சத்தம் கேட்டு மர்ம சாமிகள் அங்கிருந்து நைசாக தப்பி சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.