திருச்சியில் இளம் பெண்ணின் வீட்டில் பாய்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த 8 கிராம் நகை பணம் திருட்டு .
திருச்சி எடமலை பட்டிப்புதூரில்
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு .இவரது மனைவி கௌரி (வயது 26). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர்பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .வழக்கம் போல் தாய்,மகள் இருவரும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது,
படுக்கை அறையில் பாய்க்கு அடியில் வைத்திருந்த 8 கிராம் நகை , மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் கள்ளச்சாவி கொண்டு வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இது குறித்து கௌரி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.