திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 52 பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பாலன் மேஸ்திரியை பணி செய்ய விடாமல் ஒப்பந்த பணியாளர் டாங்கோ என்பவர் தன்னுடைய பணியை செய்யாமல் கோட்டத்தலைவர் வலதுகரமாக செயல்படுகிறார் இவர் தான் வருகை பதிவேடுகளை பதிவு செய்கிறார் அப்படி என்றால் யாருக்கு மாநகராட்சி பணியில் அதிகாரம்? ஒப்பந்த பணியாளருக்கா இல்ல வார்டு மேஸ்திரிக்கா??
பொன்மலை மண்டலத்தலைவர் துர்காதேவியின் அராஜ போக்கை கண்டித்து பணிக்கு வராமலே ஊதியம் வாங்கும் ஊழியரை கேள்வி கேட்பது குற்றமா? இது தான் சமூக நீதிக்கான ஆட்சியா? இச்செயல் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவரிடம் பாலன் மேஸ்திரி புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் திருச்சி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக வருகின்ற 11-07-2025 வெள்ளிக் கிழமை காலை 11:00 மணிக்கு பொன்மலை கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் தமிழ் புலிகள் கட்சி மற்றும் தோழமை கட்சிகள், சாமானிய மக்கள் நல கட்சி நாம் திராவிட முன்னேற்ற கழகம் தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறும் என
தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் திருச்சி ரமணா என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.