மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோசகோப்பழு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர் ஆன சுந்தரேஷ்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ப்ரீத்தி அப்பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ப்ரீத்தி கடந்த வாரம் வியாழக்கிழமை, அன்று கே.ஆர் பேட் தாலுகாவில் உள்ள கரோக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த புனித் என்ற இளைஞருக்கு பிரிண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி இருக்கிறார். இதனை புனித் ஏற்று இருக்கிறார். இதன் பின்னர் ப்ரீத்தி புனித்திற்கு மெசேஜ் அனுப்ப இருவரும் நள்ளிரவு வரை சாட் செய்து கொண்டிருந்தனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமை ப்ரீத்தி புனீத்திற்கு தனது மொபைல் எண்ணை பகிர்ந்து தனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். இதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனை எடுத்து சனிக்கிழமை இருவரும் பேசியபோது புனைத்திடம் ப்ரீத்தி தன்னை காதலிக்குமாறும் அதற்கு பதிலாக தான் பணம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஞாயிற்றுக்கிழமை இருவரும் சந்திக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்
இதனை அடுத்து ஹசன் நண்பர் ஒருவரிடம் இருந்து காரை வாங்கிக்கொண்டு பிரீத்தி பார்ப்பதற்காக புறப்பட்டுள்ளார். ப்ரீத்தி தனது கணவரிடம் தோழி ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புனித்தை பார்க்க வந்துவிட்டார். புனித்திடம், ப்ரீத்தி தன்னை ஒரு லாங் டிரைவ் கூட்டிச் செல்லுமாறு கூறவே புனித் பிரீத்தி இருவரும் கே.ஆர்.எஸ் அணைக்கு சென்று அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை அடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன் பிறகு புனித் லாட்ஜ் அறையை காலி செய்து விட்டு கிளம்பலாம் என பிரித்தியிடம் சொன்னபோது இன்னும் சற்று நேரம் இருக்கலாம் என பிரித்தி கூறிய போது புனித் அதனை மறுத்து உடனடியாக கிளம்ப முடிவு எடுத்துள்ளார்.
ப்ரீத்தி ஹசன் நகருக்கு பேருந்தில் ஏறி செல்லுமாறு புனித் கூறியதற்கு அவர் தன்னை கே.ஆர்.பேட் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறியிருக்கிறார்.
இதனால் அவர்கள் காரில் கே.ஆர்.பேட் சர்க்கிள் பகுதிக்கு சென்றுள்ளனர் அங்கு ப்ரீத்தியின் வற்புறுத்தலின்படி புனித் அவரை யாரும் இல்லாத அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு வைத்து உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என பிரீத்தி வற்புறுத்திய நிலையில் புனித்திற்கு மறுத்திருக்கிறார். தனது கிராமத்தினர் யாரும் பார்த்து விடுவார்கள் என அவர் கூறியதற்கு ப்ரீத்தி அவரின் ஆண்மையை பற்றி சில ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்களை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த புனித் ப்ரீத்தியை காரில் அமரச் சொல்லி அவரது தலையில் பலமாக கல்லால் தாக்கி இருக்கிறார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் புனித் அவரை அங்கிருந்த பெரிய கல்களை எடுத்து பிரீத்தியை தாக்கியிருக்கிறார். மேலும் அவரது துப்பட்டாவை எடுத்து கழுத்தையும் நெறித்து இருக்கிறார். இதனை எடுத்து ப்ரீத்தி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதன் பின்னர் அங்குள்ள தோப்பு ஒன்றில் தேங்காய் மட்டைகளை மூடி பிரீத்தியின் உடலை மறைத்து வைத்து விட்டார்.
இதனிடையே மனைவியை காணாத கணவர் சுந்தரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் ப்ரீத்தியின் போனுக்கு கால் செய்தனர்.
அப்போது பேசிய புனித், தனது காரில் வந்த பிரீத்தி போனை வைத்துவிட்டு சென்று விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இதன் பின்னர் பிரீத்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது போலீசார் புனித்தை தேடி வருகின்றனர்.