தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது .
மணப்பாறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில்
மாவட்ட பொருளாளர் வசந்தபெரியசாமி வரவேற்புரையாற்றினார்,
மாவட்ட அவைதலைவர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மணப்பாறை சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் அர்ஜூன், மாவட்ட துணை செயலாளர், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனார்கள்.
மாவட்ட செயலாளர், மாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், துணை செயலாளர், மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார், விவசாய அணி துணை செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் .சரவணன், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், வழக்கறிஞர் எஸ்.முல்லைசந்திரசேகர், மாற்றுதிறனாளி துணை செயலாளர் வாஞ்சிகுமரவேல் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சதீஸ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்பீட்டர், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மணப்பாறை நகர செயலாளர் கோவிந்தராஜ், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திராவிடமணி, பொன்னம்பட்டி பேரூர் செயலாளர் கவுன்சிலர் ஹக்கீம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்,