திருச்சியில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.2 பேர் கைது. 3 பேர் எஸ்கேப் .
திருச்சி கேகே நகரில்
ரூ 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
2 பேர் கைது,
கார் பறிமுதல்
திருச்சி கே.கே. நகர் காஜாமலை காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கேகே நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து கேகே நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து . கொண்டிருந்த காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சையது மஜியுல்லா ( வயது 26) வரகனேரி லட்சுமி நகரை சேர்ந்த உமர் பாரூக் (வயது 26) ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 317 கிலோ புகையிலைப் பொருட்களையும், ஒரு காரையும் பறிமுதல் செய்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் ஆகும்.
இந்த புகையிலை பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.