பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்கு மின் வாரியம் அவ்வப்போது சுழற்சி முறையில் மின் பாதைகளில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இது தொடர்பான முன்னறிவிப்புகளையும் மின் வாரியம் பொதுமக்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) 03.07.2025 மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, ராம்ஜி நகர் பகுதிகளில் நாளை பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் தடை பகுதிகள்: போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, செங்கல்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கறும்பூர், புங்கனூர்
ஆகிய மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.