Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது ஏன் ? மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கேள்வி.

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை தமிழக அரசு கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும்.

 

தாய் தமிழகத்தில் அன்றாடம் விபத்துக்கள் நடக்கும் பொழுதெல்லாம் நாம் நெஞ்சை ரணமாக்கி கொண்டு கடந்து செல்கிறோம். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவி பத்து வயதேயான சிறுவன் ஸ்ரீநிவாசன் சில தினங்களுக்கு முன்பாக (23.06.2025) ஸ்ரீரங்கத்தில் காணாமல் போனதும், அதனை தொடர்ந்து அச்சிறுவனை கொள்ளிடக்கரையில் பிணமாக மீட்டது என இந்த தும்பியல் நிகழ்வை நம்மால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.

 

மேலும் அச்சிறுவனுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைதிருப்பான்…?? என யோசிக்க தான் தோன்றுகிறது.

 

இதே போன்று கடந்தாண்டு ஸ்ரீரங்கத்திலுள்ள ஒரு. வேதபாடசாலையில் விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராம் ஆகிய மூன்று மாணவர்கள் கொள்ளிடக்கரையில் ஆற்று நீரில் மூழ்கி இறந்து போனார்கள். இந்த நிகழ்வு தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்ததோடு சரி, குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

இவ்வாறாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் தெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் தீர்த்தவாரி போன்ற உற்சவங்களில் குளத்திலும், ஆற்றிலும் பலர் நீச்சல் தெரியாமல் இறந்து போவது தொடர் கதையாகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பாடசாலையிலேயே தங்கி வேதம் பயில்கிறார்கள். இந்த பாடசாலையில் பயிலும் ஆயிரகணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை முறைபடுத்த, வேதபாடசாலையை கண்காணிக்க, ஆய்வு செய்ய என்ன வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது என்பது தெரியவில்லை.

 

மேலும் வேதபாடசாலை மாணவர்கள் தொடர் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக_வேதபாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு வேதத்தோடு, நீச்சல் பயிற்சி போன்ற தற்காலத்திற்கு தேவையான பயிற்சிகளை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக அரசாணை இயற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.