இன்று அகில உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி சமூக பணித்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் Sr. பரிமளா அவர்கள் வரவேற்புரை யாற்றினார். காந்தி மார்க்கெட் சரகம் காவல் உதவி ஆணையர் S. பழனிச்சாமி அவர்கள் குடி மற்றும் போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் பற்றி எடுத்துக் கூறினார். Dr. A. நிரஞ்சனா தேவி பேராசிரியர் மனநல மருத்துவ துறைத் தலைவர் கி ஆ பெ வி மருத்துவ கல்லூரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மார்ட்டின் மூத்த வழக்கறிஞர் அவர்களும் கலந்து கொண்டார்.
போதை எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்க ப் பட்டது. நிகழ்ச்சியில் குடிப்போதை மையத்தில் சிகிச்சை பெற்று 20 வருடங்களுக்கு மேல் குடியை மறந்து வாழ்க்கை நடத்தி வரும் நபர்கள் கெளரவப் படுத்தப்பட்டனர். விருதுகள் வழங்கப்பட்டது. புனித சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவ மாணவியரின் போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றுது.
.பள்ளி மாணவியரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியை sr. ஜெயசீலிப்ரியா மற்றும் Mrs. ஆர்த்தி அவர்களும் தொகுத்து வழங்கினர். சுமார் 200க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் வெளிச்சம் கலை குழுவினரின் போதை எதிர்ப்பு தின வீதி நாடக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர (தெற்கு) காவல் இணை ஆணையர் சிபின் அவர்களும் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் டாக்டர். பிரபு அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
நி. சரவணகுமார் வல்லுநர். உள். மாதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை. அவர்களும் கலந்து கொண்டார். டயஸ் நன்றி கூறினார்.