அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்.
ஜூலை 9-ந் தேதி நடைபெறும்
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் தலைமையில் நேற்று தொடங்கி இன்று திருச்சியில் முடிவு பெற்றது .
இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன். உ .வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி..சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடிப்பெற்ற சட்ட உரிமைகளை பறித்து சுரண்டலை தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது, அனைத்து மாநில அரசுகளையும் மேற்படி சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்கிட கட்டாயப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து வரும் ஜூலை 9ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆதாரவாளர்கள் நேரடியாக ஈடுபட்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது.
சமஸ்கிருதத்துக்கு அதீத நிதியும், இன்றைக்கும் வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியம் ஒதுக்கப்பட்டுள்ளது
.ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.