திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது, அண்ணா நகரைச் சோ்ந்த ரபீக் (வயது 34) என்பவா் லாட்டரி விற்பனை செய்த நிலையில் கையும்களவுமாக பிடிபட்டாா்.
அவரிடமிருந்த கேரளா லாட்டரி எண்களைப் பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸாா் ரபீக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.