திருச்சியில்
3 மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
உய்யக்கொண்டான் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது 39) இவர் கடந்த 11ந்தேதி தன் மோட்டார் சைக்கிளை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்தி விட்டு மதுரைக்கு சென்றார். அன்று இரவு திரும்பி இருந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரிந்தது. இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மண்டல்கோட்டை சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 29) இவர் தென்னக ரெயில்வேயில், உதவி டிரைவராக வேலை செய்து வருகிறார் கடந்த மாதம் 29ந் தேதி தன் மோட்டார் சைக்கிளை ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரிந்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கொளஞ்சிபாடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35. ) தென்னக ரெயில்வேயில் சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13 ந் தேதி தன் மோட்டார் சைக்கிளை ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்தி விட்டு சென்றார். கடந்த 17 ந்தேதி வேலை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்.திருட்டு போனது தெரிந்தது.
இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறித்து
கன்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு வீரசிங்கம்பட்டியைச் சேர்ந்த ஆகஸ்டின் (வயது 54 )என்பவர் இந்த மூன்று மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.