இன்று உறையூர் டாக்கர் ரோட்டில் தாய், மகள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்து
தாய், குழந்தை படுகாயம் .
மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டில் காய்கறி தரைக்கடைகள் உள்ளன.இங்கு அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து காய்கறி வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக பெண் ஒருவர் தனது 3 வயது மகனுடன் அங்கு வந்தார்.காய்கறி வாங்கிக் கொண்டு இருந்தார் .
காலையில் திருச்சியில் பயங்கர காற்று வீசியது இதில் சாலையோரம் நின்ற வேப்பமரம் முறிந்து தாய் மற்றும் 3 வயது குழந்தை மீது விழுந்தது. வேப்பமரம் முறிந்து விழுந்ததில் தாய் மற்றும் 3 வயது குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த 3 வயது குழந்தையை உடனடியாக வீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு தாய்க்கும் அவரது குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.