திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர்
அபகரிக்க முயற்சி .
திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-
நாங்கள் 2007 ம் ஆண்டு கிரயம் பெற்று எங்கள் சுவாதீனத்தில் உள்ள திருவெறும்பூர் நவல்பட்டு கிராமத்தில் உள்ள 5. 83 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ. 6 கோடி மதிப்பிலான அந்த சொத்தை அபகரிக்க திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் முயன்று வருகிறார்.
எனவே மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மூலம் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட எதிரியின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.