திருச்சி பாலக்கரையில்
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது.
திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதாக நேற்று பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்த பிரின்ஸ் (25) என்பதும், அவர் அங்கு கஞ்சா விற்றதும் தெரிந்தது. பாலக்கரை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது