வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அரியமங்கலம் மலையப்பன் நகரை சேர்ந்த மனோகரன் (வயது 70) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் மனோகரனை கைது செய்து அவரிடமிருந்து 17 கிலோ ஹான்ஸ் விமல் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று திருச்சி கே. சாத்தனூர் வடுகபட்டி பைபாஸ் சாலை பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 24) என்பவரை கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கணேசன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.