திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தென்னூர் பகுதி சார்பில் தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் அப்துல்லா தலைமையில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் .
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தென்னூர் பகுதி சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தென்னூர் குத்பிஷா நகரில் நடந்த விழாவிற்கு பகுதி செயலாளர் தென்னூர் டி. அப்துல்லா தலைமை தாங்கினார்.
கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரா முருகன், மத்திய மாவட்ட தலைவர் செந்தில், சிறப்பு அழைப்பாளர் ஆர்.ஷேக் அலாவுதீன், இளைஞர் அணி அமைப்பாளர் SRM அப்பாதுரை ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள். வீட்டு உபயோகத்திற்கான பிளாஸ்டிக் பொருட்கள், பள்ளி ,மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகம், பென்சில் பாக்ஸ், மற்றும் பரீட்சை அட்டை ஆகியவற்றை வழங்கினார்கள். இதே போல் தென்னூர் அண்ணாநகர், கொரடன்தோப்பு, பாரதிநகர் ஆகிய இடங்களிலும் மொத்தம் சுமார் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை விடிவெள்ளி குழந்தைகள் சிறப்பு பள்ளியில் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
இந்த விழாக்களில் இணை செயலாளர் S.ஷேக் (எ) இஜாஜ், பொருளாளர் நிசார் அலி, துணை செயலாளர்கள் முகமது அஸ்வர், பைரோஸ், அப்துல் பாசித் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.