திருச்சியில்
ஆட்டோ கடத்தல்
2 பேர் கைது.
திருவறும்பூர்
வேங்கூர் அசோக் நகர் பகுதியை
சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 17 ந்தேதி அன்று திடீரென்று மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் ஆட்டோவை கடத்திக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதைபடுத்து சதீஷ்குமார் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் கண்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை திருடிய மர்ம
ஆசாமிகளை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்கிடமாக அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை செய்தபோது மிளகு பாறையை சேர்ந்த பாலமுருகன் (வயது 45) கணேஷ் (வயது 42)ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்த போது அந்த இரண்டு பேர் தான் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கண்டேன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகன், கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.