திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே
போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர்
சுலேக்சனா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (வயது 27),ஹரி விஷ்வா (வயது 19) என்பதும், கீழ வண்ணாரப்பேட்டை சேர்ந்த சதாசிவம் (வயது 20) ஆகிய மூன்று பேர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது
இதையடுத்து அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.