எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு .
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .
திருச்சி பிராட்டியூர் காவேரி நகர் பகுதியியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42 ) இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மகள் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாதது தெரிய வந்தது.இதை தொடர்ந்து உடனடியாக அவரது தந்தை கருப்பையாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கருப்பையா வீட்டிற்கு வந்து பார்த்த போது
வீட்டின் கதவு திறக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது அறையின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 40 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது .இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.