திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று (19.06.2025 ) வியாழக்கிழமை சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திமுக உறுப்பினர் சேர்க்கையை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், BLA-2, BLC பணிகள் குறித்து, திமுக ஆக்க பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார் .
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மொத்த வாக்காளர்களில் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பது என இச்செயற்குழு முழுமணதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.
கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் பண்பாடு கலை கலாச்சாரம் பற்றிய ஆவணங்களை ஏற்று அறிக்கை வெளியிட மறுக்கும் மத்திட் அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தெற்கு.மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய மதயானை புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் அவர்களால் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து துணிச்சலுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் என பாராட்டியதற்கு அமைச்சர் எப்படி கொள்கை உறுதியுடன் செயல்பட்டு வருகின்றார் என்பதற்கு இதுவே உதாரணம் அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அதே போல் மதயானை புத்தகத்தை வெளியிட இசைவு தெரிவித்து வருகை புரிந்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், டாக்டர் அண்ணாமலை, மணிராஜ், வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.