ஸ்ரீரங்கத்தில்
ஆட்டோவில் கேஸ்.சிலிண்டரை திருடிய வாலிபர் கைது
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரன் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ).கூலித்தொழிலாளி.இவர் அவரது உறவினர்யிடமி ருந்து மூத்த மகன் திருமணத்திற்காக சிலிண்டர் வாங்கியிருந்தார். பிறகு பயன்படுத்திய கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு வெளியே வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 16ந்தேதி வீட்டுக்கு வெளியே வைத்திருந்த சிலிண்டரை மர்ம ஆசாமி ஒருவர் ஆட்டோவில் திருடி சென்றுள்ளார்.
.இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரையும். ஆட்டோவுடன் பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (வயது 36) என்பதும், அவர்தான் கேஸ் சிலிண்டரை திருடினார் என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்து அவரிடமிருந்து சிலிண்டர் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.