Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விபரம் ….

0

'- Advertisement -

திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

திருச்சியில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலுக்கு நாள்தோறும் டெமு (DEMU) ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

இந்த ரயில் மூலம் காவிரி டெல்டா மக்களும் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயனடைகின்றனர்.

 

Suresh

தற்போது திருவாரூர்-கீழ்வேளூர் இடையே ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சி- காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

ஜூன் 16 இன்றும் ஜூன் 18,19,20,21,22 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்படும் டெமு ரயில், திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவாரூர்- காரைக்கால் இடையே டெமு ரயில் சேவை ரத்து செய்யப்படும்.

 

அதேபோல டெமு ரயில் காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக இன்று ஜூன் 16, 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்படும்.

 

காரைக்கால்- தஞ்சாவூர் இடையேயான பயணிகள் ரயில் (56817) இன்று ஜூன் 16, 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக தஞ்சாவூரை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.