Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி வரும் முதல்வருக்கு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில்,

Ad banner

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரம்மாண்ட வரவேற்பு

 

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

 

 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை (15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ) தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வர உள்ளார் .

 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்க உள்ளோம் .

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்துகொண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.