திருச்சி அரியமங்கலத்தில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பெண் கைது .
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் தலைவன் அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் . அப்போது எஸ் ஐ டி அருகாமையில் உள்ள
சுடுகாடு பகுதியில் ஒரு பெண்மணி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கைதானவர் அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகர் 5வது தெரு பகுதியைச் சேர்ந்த மதியழகன் மனைவி செல்வி (வயது 52) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய துண்டு சீட்டுகள் மற்றும் ரூ. 200 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் தெரிவித்து உள்ளனர்