தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக
ஸ்ரீரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றி வழிபாடு.
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ,திருச்சி திருவரங்கத்தில் இன்று ஶ்ரீ நம்பெருமாள் அந்நியர்களின் படையெடுப்புக்கு பிறகு 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் எழுந்தருளிய 654ம் ஆண்டு நன்னாளை முன்னிட்டு,
படையெடுப்பில் உயிர்நீத்த ஆச்சாரியர்கள், பக்தர்களை போற்றும்வண்ணம் திருவரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றபட்டது. இவ்விழாவில் பேரவையின் நிறுவனர் வி.சி.ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். பேரவையின் நிர்வாகிகளான ஜெய் மாருதி ரமேஷ், சித்தார்த்தன், கமல்ராஜ் மற்றும் மணிகண்டன் முன்னிலை வகித்தார்கள்
,இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.