திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை திறந்து 4 1/4 பவுன் நகைகள் கொள்ளை.
திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின்
பூட்டை திறந்து 4 பவுன்
நகைகள் கொள்ளை.
மர்ம நபர்கள் கைவரிசை. கேகே நகர் போலீசார் விசாரணை .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிவண்ணன் இவரது மனைவி யுவராணி (வயது 30.)
திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் .
இவர் வீட்டை பூட்டி கொண்டு அதன் சாவியை வாசலின் அருகே வெளியே வைத்துவிட்டு கணவருடன் மார்க்கெட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த நான்கே கால் பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர் இது குறித்து யுவராணி கே.கே.நகர் குற்ற பிரிவு காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.