திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது.
காந்தி மார்க்கெட் போலீசார் போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் அருகே எடத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். அவரிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. பின்னர் விசாரணையில் திருச்சி கிழக்கு தாராநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்த அரவிந்த் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.