Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -வது சதய விழாவில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி.

0

'- Advertisement -

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில்

 

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்

 

அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர் அமைப்புகள் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகர திமுக செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறுகையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,

மாவட்டத் துணைச் செயலாளர்கள் லீலாவேலு , மூக்கன், செங்குட்டுவன்,

மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், பொன் செல்லையா, சந்திரமோகன்,

ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, ராஜேந்திரன், பழனியாண்டி,

நகரச் செயலாளர் செல்வம்,

பகுதிச் செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், பாபு, மணிவேல் சிவக்குமார், ராஜ் முகம்மது , மோகன், நீலமேகம்,பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக்,மண்டலக்குழு தலைவர் ஜெயநிர்மலா,கவுன்சிலர் சாதிக் பாட்ஷா மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.