பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பல்வேறு
முத்தரையர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிலையில் ஒத்தக்கடை பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதே போன்று தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவு சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.