10-ம் வகுப்பு பொது தேர்வில்
சாதனை புரிந்த அரசு பஸ் கண்டக்டரின் மகளுக்கு பாராட்டு .
நிர்வாக இயக்குனர்,
பொது மேலாளர் வாழ்த்து.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டலம் கும்பகோணம்-2 கிளையில் பணபுரியும் நடத்துனர் வெங்கடேசனின் மகள் சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி அவர்களின் வாழ்த்துக்கள் மற்றும் வழிக்காட்டுதலின்படி பொது மேலாளர் முத்துக்குமாரசாமி மாணவி சோபியாவை நேரில் அழைத்து இனிப்புகள், பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் தங்கபாண்டியன், கார்த்திகேயன், உதவி மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், குமார், சுரேஷ்பார்த்திபன், கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் ராஜ்மோகன், மேரி, ஜெயக்குமார், காமராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.