திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கத்தியை காட்டி பணத்தை பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை .
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49) இவர் திருவனைக்காவல் திருநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த நான்கு ரவுடிகள் ரவிச்சந்திரன் யிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக ரவிச்சந்திரன் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த அருண்குமார் (வயது 23) தனுஷ் (வயது 21) பிரசன்னா ( வயது 24) அரவிந்தன் (வயது 24 )ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அருண்குமார் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.