திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ….?
பொது மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்வது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அந்தவகையில் இன்றைய தினம் (ஏப்ரல் 29) திருச்சி நகரின் பல்வேறு இடங்களில் பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பின் வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின் தடை பகுதிகள்: திருச்சி நகரில் கே சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் தங்கையா நகர், உடையான் பட்டி ரோடு, சின்னசாமி உடையார் கார்டன், ஏ ஆர் எஸ் நகர், தங்கைய நகர், கே சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபி காலனி, ஓலையூர் ஈபி காலனி, கருண்யா நகர், ராயல் பார்ம்ஸ், ராஜா நகர், முத்து நகர், அய்மான்கல்லூரி, கலிங்க நகர், படுகை, அன்பிலார் நகர், வடுகம்பட்டி கவிபாரதி நகர், எம்ஜிஆர் நகர் இச்சிக்காமாளப்பட்டி ஆகிய பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.