திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ராஜேந்திரன் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரது ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது ஆங்காங்கே நடக்கிறது. அப்படி லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து மாட்டி விடுகிறார்கள்.இதனால் பலஅரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சும்மா பழி வாங்குவதற்காக எல்லாம் ஒரு அரசு ஊழியர் மீது புகார் அளிக்க முடியாது.
அவர்கள் உண்மையில் லஞ்சம் கேட்டார்களா என்பதை அறிய ஆடியோ ஆதாரம், செல்போனில் பேசிய ஆதாரம் அல்லது வீடியோ ஆதாரம் அல்லது அங்குள்ள சாட்சியம் இருந்தால் தான் வழக்கை எடுப்பார்கள்.. அதன் பிறகே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி பணத்தை கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள். அதேநேரம் அரசு ஊழியர்களே சக அரசு ஊழியர்களே லஞ்சம் கேட்கும் பிரச்சனையில் சிக்குகிறார்கள். குறிப்பாக ஓய்வு பெற போகும் அரசு ஊழியர்கள் பண பலனை பெற லஞ்சம் தர வேண்டிய நிலை ஆங்காங்கே ஏற்படுகிறது. இப்படியான சூழலில் அவர்கள் புகார் அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட புகார்களை தீவிரமாக எடுக்கும் லஞ்ச ஒழிப்பு துறை கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படித்தான் ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 60) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். வருகிற 30-ந்தேதியுடன் ராஜேந்திரன் ஓய்வு பெற உள்ளார்.
இதையொட்டி ஓய்வுக்கால பணப்பலன்கள் கேட்டு அவர் கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக பணியாற்றும், கள்ளக்குறிச்சி அஜிஸ்நகரை சேர்ந்த செந்தில்குமார்
(வயது 50) என்பவர், பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இதுகுறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜேந்திரன் எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார், செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய அலுவலர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.