திருச்சி மாவட்டம் மணப்பாறை போக்குவரத்து காவலரின் பணியை பாராட்டி மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

மணப்பாறை காவல்நிலையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், கடந்த 17-ஆம் தேதி கலிங்கப்பட்டி நடுப்பட்டியைச் சோ்ந்த பெரியம்மாள் (வயது 70) என்பவரிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தேவி (வயது 43) மற்றும் ஆா்த்தி (வயது 39) ஆகிய இருவரையும் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து காவலா் மணிகண்டன் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இவரின் பணியை பாராட்டி நேற்று முன்தினம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம், மணிகண்டனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.