ஸ்ரீரங்கம் மேலூரில் 5
மாடுகளை திருடியவர் கைது
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11 மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்க சென்றார். பின்னர் வந்து பார்த்த போது 4 மாடுகளை காணவில்லை என தேடிய போது தான் மர்ம நபர் மாடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவருக்கு சொந்தமான ஓர் மாட்டையும் மர்ம நபர் திருடி சென்று இருந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தனித்தனியே ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மாடுகளை திருடிய நபரை தேடி வந்தனர் .
இந்த விசாரணையில் மாடுகளை திருடியது திருவள்ளூர் மாவட்டம் கொசவன் பேட்டையை சேர்ந்த முகுந்தன் (வயத 27) என தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் முகுந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.