Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தங்கையிடம் அத்துமீறிய விஜய் கட்சியின் இன்ஸ்டா பிரபலம். முட்டி போட வைத்து துவைத்த அண்ணன் நண்பர்கள் .

0

'- Advertisement -

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்த விஷ்ணு குமார் என்பவர் தனது நண்பரின் தங்கையிடம் தவறாக நடந்துகொண்டதால், அவரை நண்பர்கள் பலரும் முட்டி போட வைத்து செய்த தவறுக்கு வாக்குமூலம் வாங்கிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்களை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் ஷாட்ஸ் போன்ற வசதிகள் வந்தபிறகு, பலரும் இதையே தங்கள் முழுநேர வேலையே எடுத்துக்கொண்டு, கோவில்கள், மற்றும் பொது இடங்களில், விதவிதமான வீடியோகளை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த வகையில், இன்ஸ்டா மற்றும் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் விஷ்ணு. விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாக வீடியோக்களை பதிவிட்டு வந்த இவர், தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நான் செய்தது தவறுதான், நண்பணின் தங்கையிடம தவறாக நடக்க முயற்சி செய்திருக்க கூடாது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஷ்ணு ஒரே நாளில் ட்ரெங்கில் வந்துவிட்டார்.

 

Suresh

ஒரு நாள் மட்டுமே பார்த்த நண்பனின் தங்கைக்கு, வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்து, தவறாக பேசியுள்ள விஷ்ணு, இந்த பெண்ணின் வீட்டுக்கே சென்றுள்ளார். ஆனால் இவர் தவறாக மெசேஜ் செய்கிறார் என்பதை தனது அண்ணனிடம் அந்த பெண் கூறியதை தொடர்ந்து வீட்டில் தனது நண்பர்களுடன் காத்திருந்த அந்த பெண்ணின் அண்ணன், விஷ்ணு உள்ளே வரவும் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் விஷ்ணுவை முட்டிப்போட வைத்த அவர்கள், அவரை சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நண்பனின் தங்கை வீட்டுக்கு தவறான நோக்கத்துடன் வந்தது நான் செய்த தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கும்படி வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது மொபைல்போன் தொலைந்துபோனதால், மேற்படி எதாவது மெசேஜ் வந்தால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது விஷ்ணுவின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்த நிலை தேவையா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.