திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு.
திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி , திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

“நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்” என்று பொய் கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசினால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 19.4.2025, சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .