திருச்சி அரிஸ்டோர் மேம்பாலத்தில் பெண்ணின் 3.1/2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் . மற்றொரு சம்பவத்தில் செல்போன் திருடிய பெண் கைது .
திருச்சிஅரிஸ்டோ மேம்பாலத்தில்
இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு.
இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்.

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது 47). இவர் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் லதாவின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் செயினை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து லதா எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகில் பொன்மலை மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் செல்போனை திருடியதாக சிவகங்கை மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனைவி லட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.