திருச்சி மாநகராட்சி மாட்டு இறைச்சி கூடத்தில் வெட்டப்படாது என தெரிவித்தும் கன்றுக்குட்டிகள் வெட்ட முயற்சி
மாட்டிறைச்சிக் கூடத்தில் கன்றுக் குட்டிகளை வெட்ட எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் மாடு இறைச்சி வெட்டும் கூடத்துக்கு நேற்று சனிக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட மாடுகளில் கன்றுக் குட்டிகளும் இருந்தன.

இதைப் பாா்த்த அகில இந்திய இந்து மகா சபாவினா் அளித்த தகவலின்பேரில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாட்டு இறைச்சி கூடத்திற்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இறைச்சி வெட்டும் கூடத்தில் 5-க்கும் மேற்பட்ட கன்றுக் குட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை உரியவா்களிடம் சோ்க்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அலுவலா்கள், மாட்டு இறைச்சி வெட்டும் கூடத்தில் அனுமதிக்கப்படாத கன்றுக் குட்டிகளை வெட்டக்கூடாது என்று ஒப்பந்தக்காரா்களிடம் அறிவுறுத்தினா். கன்றுகள் வெட்டப்படுவதற்கு அகில இந்திய இந்து மகா சபா சாா்பாக மாவட்டத் தலைவா் மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் இங்கு கன்றுக் குட்டிகள் வெட்டப்படாது என்று மாநகராட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.