திருச்சி கோட்டை பகுதி வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.
திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள ஓர் டீக்கடை அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த ராம்குமார் (வயது 35) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய ரசீதுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.