திருச்சி ஒத்தக்கடை அமெரிக்கன் ஆஸ்பத்திரி எதிரில் பெட்ரோல் பங்க் அருகில் RAPHA (ராஃபா) பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.வி.என் ஹாஸ்பிடல் மேனேஜிங் டைரக்டர் டாக்டர். செந்தில் கலந்து கொண்டு கிளினிக்கை திறந்து வைத்தார்.
மேலும் பாஸ்டர்கள் ரெவெரென்ட் ராபர்ட் பிராங்கிளின், ரெவெரென்ட் கிறிஸ்டோபர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சத்யராஜ், சர்மிளா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்தவர்களை டாக்டர் கெஃப்ரி ரோஷன் வரவேற்றார்.
இம் மருத்துவமனையில் பாரம்பரியமிக்க பரம்பரை வைத்தியர் பீட்டர் அவர்களின் பேரன் கெஃப்ரி ரோஷன் அவர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.