திருச்சி மாநகராட்சி பகுதியில் வரும் வியாழக்கிழமை (10.04.2025 ம் தேதி) அன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் கே எஃப் டபிள்யூ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது.
தற்போது இதன் பிரதான உந்து குழாயை, தற்போது திருவறும்பூர் பகுதிகளுக்கு அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்தின் மூலம் செல்லும் பிரதான உந்து குழாய் உடன் இணைக்க வேண்டியுள்ளது.
மேலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட நீர்தேக்க தொட்டிக்கு கே.எப். டபிள்யு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் குடிநீர் உந்து குழாயை உயர்மட்ட நீர்தேக்க தொட்டி உந்து குழாயுடன் இணைக்கும் பணி 09.04.2025 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை,மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, மிளகுபாறை, கல்லாங்காடு, சோஷிட்டி காலனி எம்.எம் நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,ஜெகநாதபுரம், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 10.04.2025 ஒருநாள் இருக்காது.
11.04.2025 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .