குன்னூர. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் நட்பு ரீதியான முறையில் பழகி வந்துள்ளனர்.
இதன் பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக செல்போனில் இருவரும் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர்.
காதல் மயக்கத்தில் இருந்த இருவரும் ஒரு கட்டத்தில் வீடியோ அழைப்பு மூலமாக பேசியுள்ளனர்.

இதில் மாணவி ஒரு சில நேரங்களில் நிர்வாண நிலையிலும், ஒரு சில நேரங்களில் அரைகுறை ஆடைகளுடனும் தோன்றி மாணவருடன் பேசியுள்ளார். இந்த வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்களை அந்த மாணவன் செல்போனில் பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த தகவல் அந்த மாணவிக்கும் பகிரப்பட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் குன்னூர் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவியின் நண்பன் உட்பட 3 மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .