Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு.

0

'- Advertisement -

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு

Ad banner

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .

 

உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு.

 

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று பூஜை பரிகாரங்களை முடித்துவிட்டு நேற்று இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூசாரி கோவிலை திறக்க வந்த பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்ட கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.