காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே காதலர் வீட்டில் காதலி முற்றுகையிட்ட பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற இளம்பெண், கோவையில் கல்வி பயின்ற போது, பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த பரணிகுமாரை காதலித்துள்ளார்.
இருவரும் பின்னர் சென்னையில் வேலை செய்துவர, அங்கு அவர்கள் காதல் தொடர்ந்ததுடன், பரணிகுமார் திருமணம் செய்வதாக கூறி ரேணுகாதேவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பமான ரேணுகாதேவி, பரணிகுமாரின் விருப்பப்படி கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், பரணிகுமார் பணி மாறுதலாகி பெங்களூருவிற்கு சென்றுள்ளார். அதற்குப் பிறகும் சென்னை வருகைதந்து ரேணுகாதேவியுடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.
ஆனால், யாருக்கும் தெரியாமல் பரணிகுமாருக்கு அவரது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், அதை ரேணுகாதேவி தற்செயலாக அவரது மொபைலில் உள்ள திருமண புகைப்படத்தை பார்த்தபோது தான் உண்மை தெரிந்தது என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகாதேவி பரணிகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் திருமணத்தை ஒப்புக்கொண்டு வேறொரு மாப்பிள்ளையை பார்த்துக்கொள் என கூறியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த ரேணுகாதேவி, கோவைக்கு வந்து பரணிகுமாரின் வீட்டின் முன் தரையில் அமர்ந்து நியாயம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் பரணிகுமாரின் பெற்றோர், திருமணம் நடந்துவிட்டது. இங்கிருந்து சென்று விடு என கூறி மிரட்டியுள்ளனர்.
மேலும் ரேணுகாதேவியை வீட்டின் முன்புறம் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டியதுடன், உள்ளே செல்ல முடியாமல் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ரேணுகாதேவி, 2 நாட்களாக அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து தர்ணா செய்தார்.
இது குறித்து பரணிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, அவர் கோவைக்கு வந்து ரேணுகாதேவியிடம் சமாதானம் பேச முயற்சி செய்தார். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்காததால், ரேணுகாதேவி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்து, பின்னர் வழக்கை சூலூர் காவல் நிலையத்துக்கு மாற்றி விசாரிக்க ஏற்பாடு செய்தனர்.