திருச்சி சங்கிலியாண்ட புரம் பகுதியில்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.

2 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள ரெயில்வே புதர் பின்புறம் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அப்பகுதி மக்களிடம் பரிசு தொகை கிடைக்கும் என கூறி ஏமாற்றி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை பாலக்கரை காவல் நிலைய போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் சாமி (வயது 21) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மேலும் 2 பேரை பாலக்கரை காவல் நிலைய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மைக்கேல் சாமியிடம் இருந்து அவரிடம் இருந்து நம்பர்கள் குறித்த சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.