நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்வில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு நடக்க மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது .
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் 66வது பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு இலவச சேலைகளை இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
தொடர்ந்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ஈத் மிலன் சந்திப்பும் நடைபெற்றது. திருச்சி தென்னூர் ஒத்தமனாரார் பள்ளிவாசல் அருகில் உள்ள மாவட்ட செயலாளர் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சோமரசம்பேட்டை அல்லாபிச்சை முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜித் வரவேற்புரை ஆற்றினார் .
மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார்.
மாநகர மாவட்ட தலைவர் ஜாகிர் கான் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாவட்ட துணை செயலாளர் ஹபித் முகமது, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாவட்ட பொருளாளர் முஸ்தபா ,புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால், மாநில தலைமை கழக செயலாளர் சாதிக்கான், காமராஜர் நகர்பாபு ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் 66 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவுற்றது.